போர் கண்ட சிங்கம்..! கதறி அழுத ‘தல’ தோனி! – ஹர்பஜன் சொன்ன உருக்கமான சம்பவம்!
ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் நாயகனாக தோனி பார்க்கப்படுகிறார். ஆனால் ஒரு சமயம் இதே சென்னை அணியால் தோனி கண்ணீர் சிந்திய சம்பவம் ஒன்றை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின் 16வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனின் சூப்பர் ஹீரோவா பாரக்கப்படுகிறார் தோனி. வான்கடே, ஈடன் கார்டன், சின்னசாமி ஸ்டேடியம் என சென்னை அணி செல்லும் இடத்தில் எல்லாம் தோனி.. தோனி என குரல்கள் ஒலிக்கின்றன. இந்த ஐபிஎல் போட்டியே தோனியின் கடைசி போட்டியாகவும் இருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.
அதற்கேற்றார்போல் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ரசிகர்கள் அனைவராலும் போர் கண்ட சிங்கமாக பாரக்கப்படும் தல தோனி கண்ணீர் விட்டு அழுத ஒரு உருக்கமான சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
அதில் அவர் “ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தொடருக்கு திரும்பியபோது அதை வரவேற்கும் விதமாக வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. பொதுவாக ஆண்கள் அழுவதில்லை என்று சொல்வார்கள். ஆனால் அன்று இரவு எம்.எஸ்.தோனி அழுதார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இதை பற்றி பெரிதும் யாருக்கும் தெரிந்திருக்காது” என்றார்.
அவர் சொல்வதை ஆமோதித்து பேசிய இம்ரான் தாஹிர் “ஆமாம். நானும் அப்போது அங்கு இருந்தேன். அவர் அழுவதை பார்த்தபோது இந்த அணி அவருக்கு எவ்வளவு முக்கியமானது, இதை எப்படி ஒரு குடும்பமாக அவர் கருதுகிறார் என்று எண்ணி நாங்களும் உணர்ச்சிவமானோம். அந்த தொடரில் நாங்கள் கோப்பையை கைப்பற்றிய போது நாங்கள் மிகவும் பெருமைப்பட்டோம்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K