தோனி ஓய்வு: வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Last Updated: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (19:45 IST)
இந்திய அணியிலுள்ள மூத்த கிரிக்கெட் வீரரான தோனிக்கு தற்போது
36 வயதாகிறது. தோனியின் வயதை காரணம் காட்டியே பலர் இவரை விமர்சித்து வருகின்றனர்.

மேலும், தோனி ஃபிட்டாக இல்லை எனவும் அவரது உடல் தகுதியை விமர்சித்து அவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். மேலும், அவர் எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.


இந்நிலையில், தோனி மொஹாலியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகியது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த உண்மை தகவலை ஆராய்ந்த போது, பின்வரும் செய்தி வெளியாகியுள்ளது. மும்பை போலீஸுக்கு சொந்தமான பாதுகாப்பு நாய் ஒன்று தனது பணியில் இருந்து டிசம்பர் 13 ஆம் தேதி ஓய்வு பெறுகிறது.


இந்த நாயின் பெயர் தோனி. கடைசியாக அந்த நாய் மொஹாலி கிரிக்கெட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். அதன் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு பெறும் என தெரியவந்துள்ளது. தோனி ஓய்வு குறித்து உண்மை செய்தி வெளியான பின்னர்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :