இரண்டாவது இன்னிங்ஸ்: தெறிக்கவிட்ட இந்தியா; தவிக்கும் இலங்கை

India
Last Updated: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (17:25 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

 
இந்தியா - இலங்கை அணிகள் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 373 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இன்றைய நான்காவது நாள் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்நிலையில் இலங்கை அணி 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
 
இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் குவித்து தடுமாறி வருகிறது. நாளை கடைசி நாள் போட்டியில் இலங்கை தோல்வியை தவிர்க்க போராட வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :