செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (07:57 IST)

மீண்டும் தோனிக்கு அணியில் இடம் – கடைசி தொடரா ?

நியுசிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதையடுத்து நியுசிலாந்துக்கு சென்று 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த இரு தொடர்களாக 20 போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படாத தோனி மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்க இருப்பதால் தோனி போன்ற அனுபவ வீரர் அணிக்குத் தேவை என அணி நிர்வாகம் முடிவு செய்து தோனியை சேர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட தோனியின் 20 ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை முடியவில்லை என நிருபணம் ஆகியிருப்பதாக ரசிகர்கள் தோனி புகழ் பாட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இன்னும் ஒரு சிலரோ இதுதான் தோனிக்குக் கடைசி தொடராக இருக்கும் எனவும் தோனியை சிறப்பாக வழியனுப்பதான் அவ்ருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய அணி விவரம் :-
ஒருநாள் போட்டி

விராட் கோலி, ரோஹித் சர்மா,  ராகுல், ஷிகர் தவண், ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமெட், ஷமி.

20 ஓவர் அணி

விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவண், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமெது