வருகிறார் ஹர்திக் பாண்ட்யா – நாடு திரும்பும் பிரித்வி ஷா !
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்களில் வென்றுள்ள இந்திய அணி பெர்த்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்த இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா இன்னும் குணமடையாத காரணத்தால் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அதேப் போல ஆசியக் கோப்பையின் காயமடைந்த மற்றொரு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவின் தோல்விக்கு முக்கியக்காரணமாக ராகுல் மற்றும் விஜய்யின் தொடக்க ஆட்டமேக் காரணம். இரண்டு இன்னிங்ஸிலும் மிக மோசமாக ஆடிய இருவரும் அடுத்தப் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் இந்தியா புதிய தொடக்க ஆட்டக்காரர்களைத் தேர்வு செய்யவேண்டியக் கட்டாயத்தில் உள்ளது.
இந்திய அணி விவரம்
விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, அஜிங்க்யே ரஹானே, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பர்தீவ் படேல், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால்