1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (16:19 IST)

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ஐபிஎல் அணி உரிமையாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்கா. எல்லா போட்டிகளுக்கும் அட்டண்டன்ஸ் போடும் அவர் கடந்த சீசனில் கே எல் ராகுலோடு நடத்திய வாக்குவாதத்தில் பிரபலம் ஆனார். அணிக்குள் அதிக தலையீடு செய்பவரான அவர் அதன் பிறகு ரசிகர்களால் அதிகம் கேலி செய்யப்படுபவர் ஆனார்.

இந்நிலையில் அவர் இந்த ஆண்டு லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய்க்கு வாங்கி, கேப்டனாக அறிவித்தார். ஆனால் இதுவரை ரிஷப் பண்ட் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் ஒன்றையும் விளையாடவில்லை. இதுவரை மூன்று போட்டிகளில் 26 பந்துகளை சந்தித்து 17 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதுவரை லக்னோ அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்றுள்ளது.

ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் சஞ்சய் கோயங்கா ரிஷப் பண்ட் உடன் காரசாரமாகப் பேசும் வீடியோக் காட்சிகள் வெளியாகின்றன. சஞ்சிவ், அணிக்குள் அதிக தலையீட்டை நடத்துகிறார் என்றும் ராகுல் போலவே, பண்ட்டையும் அவர் அவமரியாதை செய்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ரிஷப் பண்ட்டும் தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சமூகவலைதளத்தில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.