நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி-20 போட்டி: இந்திய அணி மீண்டும் 'தல'

Last Modified திங்கள், 24 டிசம்பர் 2018 (17:42 IST)
ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் 26ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரை அடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி, தலைமையிலான அணியில் ரோஹித் சர்ம, கே.எல்.ராகுல், தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்டியா, குல்தீப் யாதவ, யுஜ்வேந்திரா சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோர் உள்ளனர்.


இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 23ஆம் தேதி தொடங்கவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :