1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2017 (19:19 IST)

மைதானத்திற்குள் நுழைந்த தோனி ரசிகர் செய்த காரியம்??

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, டெஸ்ட் தொடரை வெற்றி பெற்ற கையோடு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
 
இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இந்தியா, இலங்கை அணி சமநிலையில் உள்ளது. நேற்றைய போட்டி, எதிர்ப்பார்த்தைவிட மிகவும் சுவாரஸ்மாய் இருந்தது. இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது 3 வது ஒருநாள் இரட்டை சதத்தை அடித்தார். இதன் மூலம் மூன்று இரட்டை சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதெல்லாம் போக, தோனியை எப்பொழுதும் மறக்க முடியாது அல்லவா. நேற்றைய போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு ரசிகர் தடுப்பு சுவரை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்தா். 
 
அவர் தோனியை நோக்கி ஓடி, அவரது காலை தொட்டு வணங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு வீரர் விரைவாக வந்து அந்த ரசிகரை அழைத்து சென்றார். இதனால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.