1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (16:22 IST)

வாக்கிங் போக வேண்டுமா? கட்டணம் செலுத்துங்கள்; தமிழக அரசு அதிரடி

அரசு ஸ்டேடியங்களை பராமரிக்க நடைப்பயிற்சி மற்றும் விளையாட வரும் பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்க என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.


 

 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் சார்பில் விளையாட்டு மைதானங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சிறுவர்கள, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பல்வேறு வசதிகளை செய்து வந்தது. ஆனால் தற்போது நிதி ஆதாரமின்றி முறையாக பராமரிக்க முடியாத நிலையில் உள்ளது.
 
விளையாட்டு மைதாங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, விளையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் மைதானத்தை பயன்படுத்தும் அனைவரிடமும் தமிழக அரசு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
 
விளையாட்டு மைதானத்தை பராமரிக்க ரூ.250 முதல் ரூ.1100 வரை வசூலிக்க உத்தவிட்டுள்ளது. தமிழகத்தில் 17 பல்நோக்கு விளையாட்டு அரங்குகள் மற்றும் 25 மனி விளையாட்டு அரங்குகள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்தில் கீழ் இயங்கி வருகின்றன்.
 
இந்த கட்டணம் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து என தனித்தனியாக வரையறுக்கப்பட்டு வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டு வீரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.