திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:30 IST)

படகு சவாரியில் பறவைகளுக்கு உணவளித்த தவான் –வெடித்த சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான், சில நாட்களுக்கு முன்னர் வாரணாசிக்கு சுற்றுலா சென்று அங்குள்ள கோயில்களை வழிபட்டார். அதன் பின்னர் கங்கை நதியில் படகு சவாரி மேற்கொண்டார். அப்போது பறவைகளுக்கு அவர் உணவளித்ததை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளத்திலும் பகிர்ந்தார்.

இப்போது அது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பறவைக் காய்ச்சல் காரணமாக பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்று  மாவட்ட நிர்வாகமும் படகோட்டிகளிடம் கூறியிருந்தது. அதையும் மீறி தவான் உணவளித்ததால் படகோட்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.  சுற்றுலா பயணிகளிடம் இந்த விதிமுறையை படகை இயக்குபவர் சொல்லாமல் விட்டதால் இந்த நடவடிக்கை என சொல்லப்படுகிறது.