காபா டெஸ்ட்டில் கலக்கிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பொறுப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Last Updated: செவ்வாய், 26 ஜனவரி 2021 (09:56 IST)

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு தேர்தல் தூதுவர் பொறுப்பு வழங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தார் வாஷிங்டன் சுந்தர். பந்துவீச்சில் விக்கெட்களையும் சிறப்பான அரைசதமும் அடித்து தன்னை ஒரு ஆல்ரவுண்டராக நிலைநாட்டினார். இந்நிலையில் இப்போது சென்னையில் தனிமைப்படுத்துதலில் இருக்கும் அவருக்கு சென்னை மாநகராட்சி சட்டசபை தேர்தலில் மாவட்ட தேர்தல் தூதுவர் பொறுப்பு வழங்கியுள்ளது.

முதல் தலைமுறை வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக சுந்தரை வைத்து முன்னெடுப்புகள் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :