1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 23 டிசம்பர் 2020 (12:03 IST)

பந்துவீச்சாளர் சாஹல் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

பந்துவீச்சாளர் சாஹல் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராகிய யுஜ்வேந்திரா சாஹல் திருமணம் நேற்று நடைபெற்றது. அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள், இந்நாள் வீரர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் சாஹல் கடந்த சில ஆண்டுகளாக நடன இயக்குனர் மற்றும் யூடியூப் பிரபலம் தனஸ்ரீ வெர்மா என்பவரை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் நேற்று நடைபெற்றது 
 
இந்து மத முறைப்படி நடந்த இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சாஹல் மற்றும் தனஸ்ரீ வெர்மா திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் சாஹல் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது திருமண புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பதும்,  இந்த புகைப்படத்தை பார்த்து தனது வாழ்த்துக்களை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் திருமணத்திற்கு முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பதும், ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது