வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (09:58 IST)

மெல்போர்ன் டெஸ்ட்ல வார்னர் இல்ல.. முதுகுவலியொடு வரும் ஸ்மித்! – இந்தியாவுக்கு வாய்ப்பா?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இரண்டாவது டெஸ்டில் வார்னர் கலந்துகொள்ளவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா சுற்று பயண ஆட்டத்தில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதலாவதாக அடிலெய்டில் நடந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடக்க உள்ளது.

டிசம்பர் 26ல் தொடங்கும் இந்த இரண்டாவது டெஸ்டில் காயம் காரணமாக டேவிட் வார்னர் கலந்து கொள்ள மாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் முதல் டெஸ்டில் முதுகில் காயம்பட்ட நிலையில் அவரும் இந்த டெஸ்டில் இருக்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அது சிறிய அளவிலான காயம் மட்டுமே என்பதால் அவர் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் இந்த போட்டியில் இந்தியாவின் கை உயர வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.