சுட்டிக் கேப்டனாக மாறிய ரிஷப் பண்ட்… புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
ரிஷப் பண்ட்டின் தலைமையிலான டெல்லி அணி நேற்றைய வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு தாவியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த முறை ரிஷப் பண்ட் தலைமையில் சிறப்பாக வெற்றிக்கனிகளை பறித்து வருகிறது. இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் முதல்முறையாக இந்த சீசனில் முதல் இடத்துக்கு சென்றுள்ளது.
அந்த அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விதமாக இப்போது அணியை முதல் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி 6 ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.