உலகக்கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டி- தங்கம் வென்றார் தீபா கர்மாகர்

d
Last Modified திங்கள், 9 ஜூலை 2018 (16:47 IST)
துருக்கியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கப்பதக்கம் வென்றார்.
 
துருக்கி நாட்டின் மெர்சின் நகரில் உலகக்கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தீபா கர்மாகர் கலந்துகொண்டு இறுதிப்போட்டியில் 14.150 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
 
இவர் 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
r
 
உலகக்கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்ற தீபா கர்மாகருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :