காமன்வெல்த் போட்டியில் இன்று: இந்தியாவுக்கு ஒரே நாளில் 8 தங்கம்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் 11-வது நாளான இன்று இந்தியாவுக்கு மொத்தம் 8 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்- வீராங்கனைகள் மொத்தம் 8 தங்கப்பதக்கம் வென்றனர். மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத், சுமித் மாலிக். குத்துச் சண்டை போட்டியில் மேரி கோம், கவுரவ் சோலங்கி, விகாஷ் கிரிஷன். துப்பாக்கி சுடுதல் போட்டியில் சஞ்சீவ் ராஜ்புத். ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பல்லிகல்- சவுரவ் கோஷல். டேபிள் டென்னிஸ் போட்டியில் மணிகா பதரா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
இதன்மூலம் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.