தங்கப்பதக்க நாயகனை நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்
ஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டியில் ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றார். இவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வாழத்து தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் சார்பில் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை சதீஷ்குமார் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சிறந்த மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் வாங்கிய பதக்கத்துடன் அவரை சந்தித்தேன். அவரது அரவணைப்பு மற்றும் வார்த்தைகள் உண்மையிலேயே என்னை நிறைய ஊக்கப்படுத்தியது என்று தெரிவித்தார்.