எந்த அணி பலம் வாய்ந்தது என்பது முக்கியமல்ல.. முகமது கைஃபுக்கு வார்னர் பதிலடி..!
ஆஸ்திரேலியா அணி பலம் வாய்ந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணி தான் ஆஸ்திரேலியா அணியை விட பலமானது என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். இதற்கு ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் பதிலடி கொடுத்துள்ளார்.
எந்த அணி தோற்றத்தில் பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்பது முக்கியமல்ல, இறுதிப்போட்டி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் சரியாக விளையாடுவது தான் முக்கியம். அந்தந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணிக்கே வெற்றி கிடைக்கும் அது தான் விளையாட்டு என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
முன்னதாக உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த அணி என ஏற்க முடியாது என்று கூறிய முகமது கைப்புக்கு இந்தியர்கள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்
Edited by Mahendran