1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By VM
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (11:19 IST)

எதுவுமே என் செலவில்லை எல்லாமே கட்சிதான்... தென் சென்னை வேட்பாளர் பவர் ஸ்டார் சீனிவாசன் கலகல..

இந்திய குடியரசு கட்சியின் தென் சென்னை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தனக்காக கட்சிதான் செலவு செய்து வருவதாகவும் தான் எந்த செலவும் செய்யவில்லை என்றும் கலகலப்பாக தெரிவித்துள்ளார்.
 
இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத்தலைவராக இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன், பல கட்சியிலிருந்து தாவி தாவி வந்து இந்த கட்சிக்கு வந்துள்ளார்.  தனக்கு இந்த கட்சியின் கொள்கை பிடித்திருப்பதால் தொடர்ந்து கட்சிகள் இருப்பதாக கூறியுள்ளார்.
 
ஊரெல்லாம் கடன் வாங்கி கஷ்டப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் தேர்தல் செலவுக்குஎன்ன செய்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது , எல்லாமே கட்சிதான் பார்த்துக்கொள்வதாகவும் தான் எந்த செலவும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். 
 
கடன் கொடுத்தவர்கள் மிரட்டுவதற்காக தான் போட்டியிடவில்லை என்றும் அவர்களை மிரட்டுவதாக கூறுவது முற்றிலும் தவறானது என்றும் தான் யாரையும் மிரட்டியது கிடையாது என்றும் சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
மேலும் தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் தனக்கு மகிழ்ச்சி என்றும் அடுத்த வாரம் முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.