கமீலா நாசருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நாசரின் தம்பி!

Last Modified திங்கள், 25 மார்ச் 2019 (11:56 IST)
மக்கள் நீதி மய்யத்தின் 40 தொகுதி வேட்பாளர்களும் ஒருவழியாக நேற்று அறிவிக்கப்பட்டனர். கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிட்டார்.
இந்த நிலையில் மத்திய சென்னை மநீக வேட்பாளர் கமீலா நாசருக்கு எதிராக நாசரின் தம்பி ஜவஹர் என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாசர் இதுவரை அவரது அப்பா, அம்மாவை கூட கடந்த பல வருடங்களாக பார்க்க வரவில்லை என்றும், அவரது மனைவி கமீலா, மாமனார் மாமியாரையே கவனித்து கொள்ள மறுத்த நிலையில் அவர் எப்படி நாட்டு மக்களை கவனித்து கொள்வார் என்றும் ஜவஹர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
நாசர் இதுவரை தனது மகன்களை தங்களிடம் அறிமுகம் செய்தது கூட இல்லை என்றும் கூறிய ஜவஹர், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் நாசர், தனது சொந்த குடும்பத்தை அலட்சியம் செய்தவர் என்றும் கூறினார்.
எனவே மத்திய சென்னை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் தனது அண்ணி கமீலாவுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்பதை அந்த தொகுதி வாக்காளர்கள் யோசிக்க வேண்டும் என்று கூறிய ஜவஹர், விரைவில் செய்தியாளர்களை சந்தித்து பல உண்மைகளை வெளியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :