1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sachin Tendulkar praises Subman Gill

சுப்மன் கில்லை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

Mumbai Indians
குஜராத் அணி வீரர் சுப்மன் கில்லின் ஆட்டத்தை முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில்.  நடப்பு ஐபிஎல் தொடரில்  சிறப்பாக விளையாடி வரும் இவரை முன்னாள் வீரர்கள் கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் 3 சதங்கள் அடித்துள்ளார். இத்தொடரில் அவர் மொத்தம் 851 ரன்கள் அடித்துள்ளார்.  எனவே, கபில்தேவ், சச்சின், சேவாக், விராட் கோலி போன்று அடுத்த தலைமுறை வீரர் கிடைத்துவிட்டதாகக் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர், இளம் வீரர் சுப்மன் கில்லை பாராட்டியுள்ளார்.

அதில், ''சுப்மன் கில்ஸ் வியப்பிற்குரிய விஷயமே, மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை எதிர்கொள்வதுதான்'' என்று கூறியிருந்தார்.

மேலும், ‘’இந்த ஐபிஎல் சீசனில் குஜரத் அணி வீரர் சுப்மன் கில்லின் ஆட்டம் மறக்க முடியாது. அவரது இரண்டு சதங்களும் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ‘’என்று தெரிவித்துள்ளார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : நடுவர்களை அறிவித்த ஐசிசி