வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (15:05 IST)

ஜடேஜாவை விடுவிப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை: சி.எஸ்.கே. மூத்த நிர்வாகி

Jadeja
ஜடேஜாவை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிப்பதற்கான பேச்சே எழவில்லை என சிஎஸ்கே அணியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதல் சில போட்டிகளில் கேப்டனாக ஜடேஜா பணிபுரிந்தார் என்பதும் அவரது கேப்டன்ஷிப் திருப்தி இல்லாததால் மீண்டும் தோனி கேப்டன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை என தனியார் செய்தி நிறுவனத்திற்கு சிஎஸ்கே மூத்த நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கண்டிப்பாக சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளையாடுவார் என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran