வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (18:42 IST)

ரசிகருக்கு சூப்பரான அறிவுரை கூறிய தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஒரு மாணவருக்கு சூப்பரான அட்வைஸ் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் தலைமையிலான இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்றன.

குறிப்பாக, ஐசிசி கோப்பை, ஒரு  நாள் உலகக் கோப்பை, டி-20 கோப்பை என மூன்றுவித கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தவார் ஆவார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது இந்திய அணிக்கு ஆலோசகராகவும், ஐபிஎல் அணியில் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்,ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியிடம் ஒரு ரசிகர்  உங்களுக்கு வரும் மன அழுத்தத்தையும், விமர்சனத்தையும் எப்படி எதிர்க்கொள்ளுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு தோனி, அந்த விமர்சனம் வருகின்ற நியூஸ் பேப்பர், தொலைக்காட்சியைப் பார்க்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj