திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (13:51 IST)

தோனி தயாரிக்கும் படத்தில் பிரியங்கா மோகன்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இது சம்மந்தமாக வெளியாகியுள்ள தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக ரமேஷ் தமிழ்மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இந்திய அளவில் பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரராக தோனி திகழ்ந்தாலும், அவருக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான பந்தம் பிரத்யேகமானது. சிறப்பானது.

இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த படம், தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் நிர்வாக இயக்குநரான சாக்ஷியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல். மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் நடிக்க பிரியங்கா மோகன் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.