தட்றோம், தூக்குறோம்: தமிழர்களாகவே மாறிவிட்ட சிஎஸ்கே வீரர்கள்

Last Modified திங்கள், 26 மார்ச் 2018 (19:36 IST)
இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் தல தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஆதரவை தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே வீரர்கள் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்தாலும் டுவிட்டரில் மற்றும் தமிழர்களாக மாறி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் தமிழில் டுவீட் போட்டு அசத்திய நிலையில் தற்போது இம்ரான் தாஹீரும் தமிழில் டுவீட் போட்டு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அவர் டுவிட்டரில் கூறியதாவது:


என் இனிய தமிழ் மக்களே. வணக்கம். சிங்கார சென்னைக்கு நாளை வந்துவிடுவேன். உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து வரும் உங்கள் அன்பு சகோதரன். வரோம், தட்றோம், தூக்கறோம். எடுடா வண்டிய, போடுடா விசில' என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :