தோனியிடம் கற்றுக் கொள்ளுங்கள்: லக்‌ஷ்மிபதி பாலாஜி அறிவுரை

dhoni
Last Modified வெள்ளி, 16 மார்ச் 2018 (17:54 IST)
தோனி கேப்டன்ஷிப்பில் விளையாடும் போதே அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ளுங்கள் என இந்திய அணி முன்னாள் வீரரும், சென்னை அணியின் பயிற்சியாளருமான லக்‌ஷ்மிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.

 
 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட மூன்று விதாமான ஐசிசி நடத்தும் போட்டிகளை வென்றுள்ளது. மேலும், அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு முறை ஐபிஎல் தொடரை வென்று சாம்பியன்ஸ் பட்டம் வென்றுள்ளது.
 
இந்நிலையில், நடைபெறவுள்ள 11-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. இது குறித்து சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி கூறியதாவது;-
 
தோனி இந்திய அணிக்கு சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் ஐபிஎல்யில் சென்னை அணிக்கும் சிறந்த கேப்டனாக செயல்பட்டார். சென்னை அணியில் அஸ்வின், மோகித் சர்மா, ஜடேஜா போன்ற வீரர்கள் அவரது தலைமையில் விளையாடியதால் இந்திய அணியில் விளையாட சிறப்பான முகவரி கிடைத்தது.
 
தோனி நிறைய நல்ல வீரர்களை உருவாக்கியுள்ளார். குறிப்பாக அணிக்காக சிறந்த பவுலர்களை அதிகமாக உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு பவுலரையும் அவர்களின் ஸ்டைலில் பந்துவீச விடுவார். எல்லோருக்கும் முழு சுதந்திரம் கொடுப்பார். அதனால் பவுலிங்கில் நிறைய கற்றுக் கொள்ள விரும்பும் பவுலர்கள் தோனியை பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :