வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 மே 2023 (19:08 IST)

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய போட்டியில் யாருக்கு வெற்றி?

MS Dhoni
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை புள்ளி பட்டியலில் 13 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் 15 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் தான் இருப்பார்கள். 
 
ஆனால் டெல்லி அணி தற்போது 8 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்தில் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஓர் இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran