சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி: 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் தோல்வி

Last Modified ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (19:41 IST)
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. ராயுடு அதிரடியாக விளையாடி 79 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஐதராபாத் அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் வில்லியம்சன் அதிரடியாக அடித்து ஆடினார். இருப்பினும் சென்னை அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.இதில் மேலும் படிக்கவும் :