ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (18:50 IST)

அஸ்வின், தினேஷ் கார்த்திக்: இரண்டு தமிழர்களில் இன்று வெல்வது யார்?

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணிக்கும் இடையில் இன்று கொல்கத்தா மைனாத்தில் போட்டி நடைபெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது. லின் 74  ரன்களும், உத்தப்பா 34 ரன்களும் கேப்டன் தினேஷ் கார்த்திக் 43 ரன்களும் எடுத்தனர். 
 
இந்த நிலையில் 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி தற்போது விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை அந்த அணி 8.2 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்துள்ளது. கெய்லே 49 ரன்களும் ராகுல் 46 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
 
இன்றைய போட்டியின் இரண்டு அணி கேப்டன்களும் தமிழர்கள் என்பதால் எந்த தமிழருக்கு வெற்றி கிடைக்கும் என்பது இன்னும் சிலமணி நேரத்தில் தெரிந்துவிடும்