ஐபிஎல் போட்டி; சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை

csk
Last Updated: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (13:37 IST)
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மாலை 4 மணிக்கு மோதுகின்றன.
சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றி கண்டு, பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது. அதே போல் ஹைத்ராபாத் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றி கண்டு, நெட் ரன் ரேட் படி பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது.
ipl
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் 20-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் சென்னையும், 2-ல் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன.
 
இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பட்டியிலில் முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :