செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (17:56 IST)

ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் டார்கெட் கொடுத்த சென்னை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று 20வது போட்டி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீச முடிவு செய்ததால் சென்னை அணி பேட்டிங் செய்தது. 
 
கடந்த போட்டியில் சதமடித்த வாட்சன் இன்றைய போட்டியில் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் ராயுடு அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். சுரேஷ் ரெய்னா 54 ரன்களும், தல தோனி 25 ரன்களும் அடித்ததால் சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்துள்ளது.
 
ஐதராபாத் அணியின் குமார் மற்றும் ரஷித்கான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.  இந்த நிலையில் 183 என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.