திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (19:14 IST)

சிஎஸ்கே அணியில் இதுவரை எட்டு வீரர்கள்: யார் யார்?

2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் ஏலம் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே நான்கு வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில் புதிதாக நான்கு வீரர்களை மட்டும் ஏலம் எடுத்துள்ளனர். 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் தோனி, ருத்ராஜ், ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகிய 4 பேர் தக்கவைக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா, பிராவோ, அம்பத்தி ராயுடு மற்றும் தீபக் சஹர் ஆகியோர்களை ஏலம் எடுத்துள்ளனர். குறிப்பாக தீபக் சஹாரை ஏலம் எடுக்க கடுமையான போட்டி இருந்த போதிலும் 14 கோடி கொடுத்து அவரை சிஎஸ்கே ஏலம் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் பிராவோவை ரூ.4.40 கோடி கொடுத்து ஏலம் எடுத்து உள்ளனர். தற்போது 8 வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இருக்கும் நிலையில் மீதி உள்ள வீரர்கள் யார் யார் என்பதை நாளை பார்ப்போம்.