1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (17:32 IST)

IPL 2022: அதிக பட்ச தொகையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு ஏலம்!

கடும் போட்டிக்கு இடையே மும்பை இந்தியன்ஸ் அணி இசான் கிஷனை ஏலத்தில் எடுத்து தக்கவைத்துள்ளது. 

 
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.
 
இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத விலைக்கு இஷான் கிஷான் ஏலம் போனார். மும்பை, குஜராத், ஐதராபாத் அணி இவரை ஏலம் எடுப்பதில் கடும் போட்டியாக இருந்தது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. 
 
இதுவரை நடந்த ஏலத்தில் இஷான் கிஷான்தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர். இதற்கு முன்னர் ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்களில் இஷான் கிஷான் 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் யுவராஜ் சிங் உள்ளார்.