1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
  4. IPL Auctioneer stable after medical emergency

மயங்கி விழுந்த ஹக் மெடேஸ் எப்படி இருக்கிறார்??

India
ரத்த அழுத்தம் (Postural Hypotension) காரணமாக ஏலத்தை நடத்திக் கொண்டிருந்த ஹக் மெடேஸ்  நிலை தடுமாறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. அதற்கான ஏலம் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடக்கின்றன.
 
இந்நிலையில் ஏலத்தை நடத்திக் கொண்டிருந்த ஹக் மெடேஸ் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் ஏலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனிடையே அவரது உடல்நிலை குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. 
 
ரத்த அழுத்தம் (Postural Hypotension) காரணமாக அவர் நிலை தடுமாறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நிலையாக இருப்பதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 முதல் ஹக் மெடேஸ் ஐபிஎல் ஏலத்தை முன்னின்று ஏலதாரராக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
IPL 2022: அதிக பட்ச தொகையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு ஏலம்!