வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:29 IST)

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பதக்கம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.


2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் லண்டனில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 77 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் போட்டிகள் வரும் 8 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி காமன்வெல்த் போட்டியில் 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தற்போது காமன்வெல்த் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத்சிங் வெண்கலம் வென்றார். லவ்பிரீத்சிங் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ என மொத்தம் 355 கிலோ எடையை தூக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.