தொடர்புடைய செய்திகள்
- IPL 2024: வாங்கிய அடியை திருப்பி கொடுக்குமா சிஎஸ்கே? இன்று LSG உடன் மோதல்!
- மீண்டும் சிஎஸ்கே கோட்டையில் டெவான் கான்வே.. ஆனால் இந்த வீரர் விலகல்? – ரசிகர்கள் மகிழ்ச்சி!
- “நான் அவர்களுக்காக நிறைய விளையாடி கோப்பைகளை வெல்ல உதவியுள்ளேன்” –சிஎஸ்கே தன்னை எடுக்காதது குறித்து ரெய்னா!
- 6 இன்னிங்ஸிலும் நாட் அவுட்… பினிஷிங் குமார் தோனியின் புதிய சாதனை!
- “தோனி வந்தால் பவுலர்கள் அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்..” கே எல் ராகுல் கருத்து!
சிஎஸ்கே - லக்னோ போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளி பட்டியலை பொருத்தவரை சிஎஸ்கே மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகளுமே 7 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து தலா எட்டு புள்ளிகள் பெற்றுள்ளன என்பதும் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி நான்காவது இடத்திலும் லக்னோ ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விளையாடும் இரு அணி வீரர்களின் முழு விவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
சிஎஸ்கே: ருத்ராஜ், ரஹானே, மிட்செல், மொயின் அலி, ஷிவம் துபே, ஜடேஜா, தோனி, தீபக் சஹார், தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரகுமான், பத்திரனா
லக்னோ: டீகாக், கேஎல் ராகுல், ஸ்டோனிச், ஹூடா, பூரன், படோனி, க்ருணால் பாண்ட்யா, ரவி பிஷ்னாய், ஹெண்ட்ரி, மொசின்கான், யாஷ் தாக்கூர்,
Edited by Siva
