செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (08:09 IST)

“நான் அவர்களுக்காக நிறைய விளையாடி கோப்பைகளை வெல்ல உதவியுள்ளேன்” –சிஎஸ்கே தன்னை எடுக்காதது குறித்து ரெய்னா!

சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்தியாவுக்காக விளையாடுவதில் இருந்து அவர் 2020 ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்தார். இதையடுத்து சில உள்ளூர் டி 20 லீக் போட்டிகளில் அவர் விளையாடி வந்தார்.

சி எஸ் கே அணியில் தோனியின் தளபதியாக இருந்தவர் ரெய்னா. சொல்லப்போனால் தோனியை விட பேட்டிங்கில் அதிக பங்களிப்பு செய்தவர் ரெய்னாதான். அவரை ரசிகர்கள் சின்னத் தல என்று செல்லமாக அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்ததது.

அதனால் அவரை ரெய்னாவை சிஎஸ்கே அணி தக்கவைக்கவில்லை. அதன் பின்னர்தான் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் சிஎஸ்கே அணி தன்னை ரிடெயின் செய்யாதது பற்றி பேசியுள்ள ரெய்னா “அவர்களுக்காக நான் நிறைய போட்டிகளில் விளையாடி கோப்பையை வெல்ல உதவி செய்துள்ளேன். அவர்கள் மேல் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.