திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (21:45 IST)

98 ரன்கள் இலக்கு, 22 பந்துகளில் 84 ரன்கள் அடித்த கெய்லே!

அபுதாபியில் நடைபெற்று வரும் சூப்பர் லீக் டி20 போட்டியில் 98 ரன்கள் இலக்கு என்ற நிலையில் 22 பந்துகளில் 84 ரன்களை அடித்து கிறிஸ் கெய்லே சாதனை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மாரத்தா அரபியன்ஸ் மற்றும் டீம் அபுதாபி ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே இன்று சூப்பர் லீக் போட்டியின் டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மாரத்தா அரபியன்ஸ் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 97 ரன்கள் அடித்தது
 
இந்த நிலையில் 98 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டீம் அபுதாபி அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 5.3 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது
 
இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 22 பந்துகளில் 84 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 6 பவுண்டரிகளை 9 சிக்ஸர்களும் அடங்கும். இந்த அபாரமான ஆட்டம் இன்றைய பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது