1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2020 (19:13 IST)

களமிறங்கினார் கிறிஸ் கெய்ல்: பஞ்சாப் அணிக்கு வெற்றி கிடைக்குமா?

பஞ்சாப் அணிக்காக கடந்த சில நாட்களாக விளையாட முடியாமல் இருந்த கிறிஸ் கெய்ல் இன்று களமிறங்குகிறார். இதனை அடுத்து பஞ்சாப் அணி தொடர் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற விராத் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார்.  இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய உள்ளது
 
இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட விவரங்கள் பின்வருமாறு
 
பஞ்சாப்: மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், பூரன், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டன், அஸ்வின், ரவி பிஷ்னாய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்,
 
பெங்களூர்: பின்ச், படிக்கல், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஷிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், உடானா, முகமது சிராஜ், நவ்தீப்சிங் மற்றும் சாஹல்,