1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Chris gayle celebrating his birthday today

டி 20 கிரிக்கெட்டின் யுனிவர்சல் பாஸ்… கிறிஸ் கெய்லுக்கு பிறந்தநாள்!

அமெரிக்கா
டி 20 கிரிக்கெட்டின் பாஸ் என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் இன்று தனது 41 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் எல்லாருமே டி 20 கிரிக்கெட் விளையாடுவதில் மிகுந்த ஆர்வமும் சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அந்த வகையில் கிறிஸ் கெய்ல், ஒட்டுமொத்தமாக 404 டி 20 போட்டிகளில் விளையாடி இதுவரை அவர் 13296 ரன்களை சேர்த்து அசைக்க முடியாத இடத்தில் உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தனிநபராக டி 20 போட்டிகளில் மட்டும் 1000 சிக்ஸர்களை அடிக்க அவருக்கு இன்னும் 22 சிக்சர்களே தேவை. இந்நிலையில் இன்று தனது 41 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் அவர் இன்னும் எந்தவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடக்கும் ஐபிஎல் தொடரில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
அடப்பாவி அம்பயர்..! தவறான தீர்ப்பால் பறிபோன வெற்றி! – ரசிகர்கள் அதிர்ச்சி!