சின்னம்பட்டி வரும் நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு: ஊர்மக்களின் ஏற்பாடு

natarajan
சின்னம்பட்டி வரும் நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு:
siva| Last Updated: புதன், 20 ஜனவரி 2021 (14:31 IST)
சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பந்து வீச்சாளராக சென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். ஆனால் அடுத்தடுத்து முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் முதலில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, அதன் பின்னர் டி20 போட்டிகளில் பந்துவீச்சில் அசத்திய நடராஜனுக்கு நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது


இதனை அடுத்து ஒரே தொடரில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் சர்வதேச போட்டிகளில் நடராஜன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் திரும்ப இருக்கும் நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அவரது சொந்த ஊரை சேர்ந்த சின்னப்பம்பட்டி ஊர்மக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

ஆஸ்திரேலிய பயணத்தில் சிறப்பாக ஆடிய நடராஜனை பெருமைப்படுத்தும் விதமாக சேலம் கிரிக்கெட் அகாடமி மற்றும் சின்னப்பம்பட்டி ஊர் மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் நடராஜன் சேலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :