ஒவ்வொரு ஓவரின் முதல்பந்தும் நோபால் – நடராஜன் மீது சூதாட்ட புகாரைக் கிளப்பிய முன்னாள் வீரர்!

Last Updated: செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:07 IST)

இந்திய அணியின் வீரர் நடராஜன் மீது ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டை வைத்துள்ளார ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. முன்னதாக டி20 போட்டிகள் மூலம் பிரபலமடைந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயண ஆட்டத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் இப்போது வீரர்களின் காயத்தால் அவருக்கு டெஸ்ட் அணியிலும் இடம் கிடைத்து முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் நடராஜனுக்கு விக்கெட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடராஜன் மீது ஷேன் வார்ன் சர்ச்சையான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் நடராஜன் 5 நோபால்கள் வீசினார். அவையெல்லாமே மிகப்பெரிய நோபால்கள். அதுவும் 5 ஓவர்களின் முதல் பால் நோபாலாக வீசினார். இதையெல்லாம் பார்த்து வர்ணனை செய்துகொண்டிருந்த ஷேன் வார்ன் ‘நடராஜனின் நோபால்களை பார்க்கும் போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நாமெல்லாம் நோ-பால் வீசியிருக்கிறோம். 5 ஒவ்வொரு ஓவரின் முதல் பந்திலும் ஒரு நோ-பால் வீசியது வித்தியாசமாக் இருக்கிறது.’ எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வார்னின் இந்த குற்றச்சாட்டால் இந்திய ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :