திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (07:54 IST)

பஞ்சாபை பந்தாடிய கொல்கத்தா! பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 52வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி பிளே சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த வெற்றியால் தற்போது 12 புள்ளிகளுடன் ஐதராபாத் அணிக்கு இணையாக உள்ளது கொல்கத்தா. நாளை நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வென்று, இன்று நடைபெறும் போட்டியில் ஐதராபாத் தோல்வி அடைந்தால் கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். 
 
 ஒருவேளை இன்று ஐதராபாத் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி பிளே ஆஃப் செல்வது உறுதியாகிவிடும். கொல்கத்தா, ஐதராபாத் இரண்டு அணிகளும் அடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வென்றால், அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும். 
 
 எனவே இன்றைய இரண்டு போட்டிகள் முடிந்தவுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணி எது என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிடும்
 
 52வது லீக் போட்டியின் ஸ்கோர் விபரம்:
 
 பஞ்சாப் அணி: 183/6  20 ஓவர்கள்
 
கர்ரன்: 55
பூரன்: 48
அகர்வால்: 36
 
கொல்கத்தா: 185/3  18 ஓவர்கள்
 
கில்: 65
லின்: 46
ரஸல்: 24
 
ஆட்டநாயகன்: கில்
 
இன்றைய போட்டிகள்:
 
டெல்லி மற்றும் ராஜஸ்தான்
பெங்களூர் மற்றும் ஐதராபாத்