1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (23:01 IST)

எஸ்.ஜே .சூர்யா சார்…நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்க…ரஜினி பட இயக்குநர் டுவீட்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சமிபத்தில் எந்தப் படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ரசிகர்களும் அவரிடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில் அவரது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் அவரது இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தின் டீசர் நேற்று வெளியாகி வைரல் ஆனது.

அதில் அவருக்கு முன்னாள் பயத்தில் அனத்திக்கொண்டிருக்கும் ஒருவனை டேய் சும்மா இருடா என்று கூறிவிட்டு இறுதியில் அவனைக் கொன்றுவிடுவார். இந்தக் காட்சியை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில், பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராக் தனது டுவிட்டர் பக்கத்தில், செம்ம எஸ்.ஜே.சூர்யா சார்…நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்க…செல்வராகவன் சார் இந்த மேஜிக்கை ஸ்கிரீனில் பார்க்க காத்திருக்க முடியில எனத் தெரிவித்துள்ளார்.