செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (15:44 IST)

முதல் ஓவரிலேயே கெத்து காட்டிய பூம்ரா… இங்கிலாந்து அதிர்ச்சி தொடக்கம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்துள்ளது இங்கிலாந்து.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடக்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் சற்று நேரம் முன்னர் தொடங்கியது. டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் ஸாக் கிராவ்லி ஆகிய இருவரும் இறங்கினர். முதல் ஓவரை பூம்ரா சிறப்பாக வீச ஐந்தாவது பந்தில் பர்ன்ஸ் ரன்கள் எதுவும் எடுக்காமல் எல்பிடபுள்யு ஆகி அவுட் ஆனார். தற்போது 2 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி ரன்கள் எதுவும் எடுக்காமல் 1 விக்கெட்டை இழந்து ஆடிவருகிறது.