திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (08:22 IST)

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்று துவங்குகிறது. 

 
இந்ந போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்த் சென்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்குகிறது. சோனி டென் டெலிவி‌ஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
 
இரு அணிகளும் இன்று மோதுவது 127-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 126 போட்டியில் இந்தியா 29-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 49 டெஸ்ட் டிரா ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.