செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (11:59 IST)

புது பந்த என் கையில கொடுங்கப்பா… கேட்டு வாங்கி சொல்லி அடித்த கில்லி!

நேற்று ராஜஸ்தான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் துருப்புச் சீட்டுகளில் ஒன்றாக கருதப்படுபவர் பூம்ரா. ஆனால் இந்த சீசன் ஆரம்பத்தில் அவர் பந்துவீச்சில் அதிக ரன்கள் கொடுத்தார். இது அவர் மேலான அழுத்தத்தை அதிகமாக்கியது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது அவரை 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீச அழைத்தது. அப்போது பந்து பழையதாகி விடுவதால் அவரால் ஸ்விங் செய்ய முடியவில்லை.

இந்நிலையி நேற்றைய போட்டியில் புதிய பந்தில் வீசுகிறேன் என தானாக கேட்டு வாங்கி பந்து வீசினார். நேற்றைய போட்டியில் வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் தன் பார்மை அவர் ரசிகர்களுக்குக் காட்டியுள்ளார்.