திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (09:54 IST)

முதல் ஆறு போட்டிகளில் மும்பை அணியின் ஆச்சரியமான ஒற்றுமை!

முதல் ஆறு போட்டிகளில் மும்பை அணியின் ஆச்சரியமான ஒற்றுமை!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தொடரில் இதுவரை 20 போட்டிகள் முடிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியின் முடிவில் மும்பை அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடருக்கும் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடருக்கும் மும்பை அணிக்கு ஒரு ஆச்சரியமான ஒற்றுமை இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது 
 
கடந்த ஆண்டில் நடைபெற்ற முதல் ஆறு போட்டிகளை சந்தித்த மும்பை அணி முதல் போட்டியில் தோல்வி, இரண்டாவது போட்டியில் வெற்றி, மூன்றாவது போட்டியில் தோல்வி, மற்றும் 4 முதல் 6 வது போட்டியில் வெற்றி என்ற முடிவுகளை பெற்றிருந்தது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற முதல் ஆறு போட்டியிலும் மும்பை அணி முதல் போட்டியில் தோல்வியும், இரண்டாவது போட்டியில் வெற்றியும், மூன்றாவது போட்டியில் தோல்வியும், அடுத்த மூன்று  போட்டிகளிலும் வெற்றியும் பெற்றுள்ளது
 
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் 6 போட்டிகளிலும் இந்த ஆண்டு நடைபெற்ற முதல் 6 போட்டிகளிலும் மும்பை அணியின் முடிவு ஒரே மாதிரியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கடந்த ஆண்டு மும்பை அணி சாம்பியன் பட்டம் பெற்றது போல் இந்த ஆண்டும் மும்பை அணியே சாம்பியன் பட்டம் பெறுமா? என்பதை இன்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்