ஐபிஎல் -2020; டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு
ஐபிஎல் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அனைத்து அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் யாருமே எதிர்ப்பாராத வகையில் போட்டியில் திருப்புமுனைகள் நடைபெறுவது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
இந்நிலையில் இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை 5 போட்டிகளில் ஆடி, 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ளது.
அதேபோல் ராஜஸ்தான் அனி 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று 4 புள்ளுகளுடன் 5 வது இடத்தில் உள்ளது குறிப்பிடட்தக்கது.