தொடர்புடைய செய்திகள்
- சுனில் நரேன் பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத தோனி – இன்று சிஎஸ்கே vs கே கே ஆர்!
- சி எஸ் கே அணிக்கு பின்னடைவு… முக்கிய வீரருக்கு காயம்!
- 4 போட்டிகளில் சொதப்பிய வாட்ஸன்… ஆனாலும் வாய்ப்புக் கொடுத்த தோனி – பாராட்டித் தள்ளிய முன்னாள் வீரர்!
- ஒரே வெற்றி.. ஓஹோன்னு ஃபாலோவர்ஸ்! – கொண்டாட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள்!
- ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? ராஜஸ்தான் ராயல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்!
ஜாதவை தூக்கிட்டு ராயுடுவை போடுங்க! கலகலக்கும் சிஎஸ்கே –நைட் ரைடர்ஸ் ப்ளேயர்ஸ் லிஸ்ட்!
அரபு அமீரகத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்ள உள்ள நிலையில் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆட்டங்களாக தோல்வியை சந்தித்து வந்த தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கடந்த ஆட்டத்தில் விக்கெட் இல்லாத இமாலய வெற்றி பெற்று ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்தது. இந்நிலையில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக விளையாட உள்ள சிஎஸ்கே அணி பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஷேன் வாட்சன், டூப்ளசிஸ், அம்பத்தி ராயுடு, தோனி, ஜெகதீசன், ஜடேஜா, ப்ராவோ, சாம் கரன், ஷர்துல் தாக்குர், பியூஷ் சாவ்ல, தீபல் ஷார் உள்ளிட்டோர் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குகின்றனர். கடந்த சில ஆட்டங்களாக சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவை விடுத்து வேறு வீரர்களை களமிறக்க வேண்டும் என ரசிகர்களே கூறிவந்த நிலையில் இந்த ஆட்டத்தில் ஜாதவ் இல்லை.
அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், சுப்மன் கில், சுனில் நரைன், நிதிஷ் ரானா, ஆண்ட்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், கம்மின்ஸ், ராகுல் திருப்பாதி, நாகர்கோட்டி, மாவி, வருன் சக்ரவர்த்தி ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்